முன்னணி இசையமைப்பாளராக இருக்கும்ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் வெளியாகவுள்ளது.
மேலும், அயலான், கமல் ஹாசன் 234, லால் சலாம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் இருந்து ஏற்கனவே ஜி.வி பிரகாஷ், ஏ.ஆர். அமீன் உள்ளிட்டோர் இசை உலகளவில் பயணித்து கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் அவருடைய மகள் கதிஜாவும் இணைந்துள்ளார்.
ஆம், ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா தமிழில் வெளிவரவிருக்கும் மின்மினி எனும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கி வருகிறார்.
புதிய இசையமைப்பாளருடன் பணிபுரிந்து நன்றாக இருக்கிறது என கூறி கதிஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஹலிதா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.