பொதுவாக பலருக்கும் முட்டைகளை வீட்டில் குளிர் சாதனப் பெட்டியில் வைக்கும் வழக்கம் உள்ளது. இதனால் முட்டைகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்று நம்புகின்றனர்.
ஆனால் முட்டைகளை மறந்தும் கூட குளிர்சாதன பெட்டியில் வைப்பதனால் அதன் சுவை கெட்டுப்போவதுடன், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
முட்டையில் ஊட்டச்சத்து
முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முட்டையில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இவற்றில் புரதம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
அத்தோடு அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட பிரிட்ஜில் வைக்கப்படும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுவதோடு அது மிக சீக்கிரம் பாலைப்போல் திரிந்துவிடும் என பகீர் தகவல் அளித்துள்ளனர்.
அறைவெப்ப நிலை
முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் வைத்திருந்த பின் அதனை பயன்படுத்தும் போது அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் நிலையில்,வெப்ப நிலை மாறுபாட்டினால், முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே சென்று விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து விட வேண்டும் அல்லது அறை வெப்ப நிலையிலேயே பராமரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
மேலும் குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை வைப்பதால் முட்டைகளின் இயற்கையான சுவை மாறுபட்டு விடும்.
சத்துக்கள் அழிந்துவிடும்
சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் முட்டையை உட்கொள்ளும் நாம் அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்கும் போது முட்டையின் சத்துக்கள் அழிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனால் பிரிட்ஜில் முட்டையை வைத்து சாப்பிடுவதால், அதன ஆரோக்கிய நன்மைகள் எதுவும் கிடைக்காது என்பதோடு, அதனால் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு தான் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.