இலங்கை அறிவிக்கப்படாத ஒரு முடக்க நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
‘நாட்டில் தற்போது பாடசாலைகளும் பல்கலைகழகங்களும் மூடப்பட்டுள்ளன. மருந்துப்பொருட்களிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அரச சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள் இல்லாததால் அத்தியாவசியப்பொருட்கள் பல பகுதிகளில் நினைத்த விலைக்கு விற்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பதவி விலகி மக்களின் புதிய ஆணையை பெறுவதற்காக தேர்தலை நடத்தவேண்டும்
மேலும், ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நீடிக்கும் வரை எந்த நாடும் இலங்கைக்கு உதவி வழங்காது எனவும் தெரிவித்துள்ளார்.