முடக்கு வாதம் ஒரு தன்னுடல் தாக்க நோய் (autoimmune). இதன் பொருள் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் மூட்டுக்களிலுள்ள செல்களைத் தாக்கி தவறாக வழிநடத்தும். இதனால் மூட்டுகள் வீக்கமாகவும், கடினமாகவும், வேதனையாகவும் இருக்கும்.
முடக்கு வாதம் மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் விறைப்பை ஏற்படுத்தும் ஒரு நீண்ட கால நிலை. இந்த நிலை பொதுவாக கைகள், கால்கள் மற்றும் மணிகட்டை பாதிக்கிறது.
முடக்கு வாதத்தை விரைவாகக் கண்டறிவது முக்கியம், ஏனென்றால் ஆரம்ப சிகிச்சையால் அது மோசமடைவதைத் தடுக்கலாம் மற்றும் மூட்டு சேதமடையும் அபாயத்தைக் குறைக்கும்.
முடக்கு வாதம் உள்ள சிலர் உடலின் மற்ற பகுதிகளிலும் பிரச்சினைகள் அல்லது சோர்வு மற்றும் எடை இழப்பு போன்ற பொதுவான அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.
உங்களுக்கு முடக்குவாதம் வர இவை காரணமாக இருக்கலாம்.
👉நீங்கள் ஒரு பெண் என்றால்
👉முடக்கு வாதத்தின் குடும்ப வரலாறு
👉நீங்கள் புகைப் பிடிப்பவர் என்றால்
முக்கிய சிகிச்சை தெரிவுகள் பின்வருமாறு:
☝️அறிகுறிகளை அகற்றவும், நிலைமையின் முன்னேற்றத்தை குறைக்கவும் நீண்ட காலமாக மருந்து பரிந்துரைக்கப்படும்.
☝️பிசியோதெரபி மற்றும் தொழில்சார் சிகிச்சை.
☝️எந்தவொரு கூட்டு பிரச்சினைகளையும் சரிசெய்ய அறுவை சிகிச்சை
இயற்கை மருத்துவ வழிகள்
முடக்கத்தான் என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையை, மொடக்கத்தான் என்றும் சொல்வார்கள். கிராமங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் தோட்டம் மற்றும் வேலியோரங்களில் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கொடி வகையைச் சேர்ந்தது.
மூட்டுகளை முடக்கி வைக்கும் முடக்கு வாத நோயை விரட்டுவதால், இது முடக்கற்றான் (முடக்கு அறுத்தான்) என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. பொதுவாக, வாதம், முடக்குவாதம், வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு இந்த முடக்கத்தான் நல்ல நிவாரணம் தரக்கூடியது.
ஒரு பிடி முடக்கத்தான் இலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் பங்காக சுண்டக்காய்ச்சி வடிகட்டி, ஒருவேளைக்கு 25 மில்லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வாதம், வாயுத்தொல்லை விலகும்.
பிரச்சனையைப் பொறுத்து சில நாட்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இப்படிச் சாப்பிடும்போது சிலருக்கு சில நேரங்களில் தாராளமாக மலம் போகலாம். பயப்படத் தேவையில்லை. அதிகமானால் எலுமிச்சை சாறு குடிக்கலாம்; மலம் போவது நின்றுவிடும்.
இதேபோல் கை, கால் மற்றும் முகம் போன்ற பகுதிகளில் வரக்கூடிய வாதக்கோளாறுகளுக்கு முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும்.
மேற்சொன்ன பிரச்சனை உள்ளவர்கள் காலை உணவான தோசையுடன் இந்த முடக்கத்தானை சேர்த்துக்கொள்ளலாம். அதாவது தோசை மாவுடன், அரைத்து வைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்துச் சாப்பிடுவதால் குணம் கிடைக்கும்.