முக ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டி திமுக தொண்டர் ஒருவர் விரலை துண்டித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் திகதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது
இதையடுத்து இன்றோடு அரசியல் கட்சியினர் தங்களது பரப்புரையை முடித்துகொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது
இந்த நிலையில் சிவகாசியை சேர்ந்த குருவைய்யா என்பவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல் நடத்தியதாக கூறப்படுகிறது
மேலும் அதை நிறைவேற்றும் பொருட்டு சாத்தூர் இருக்கன்குடி கோவிலில் சென்று, தனது கையின் கட்ட விரலை துண்டித்துகொண்டுள்ளார் இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்