நாடாளுமன்றத்தை சூழவுள்ள வீதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக திடீரென போடப்பட்டிருந்த வீதித் தடைகள் இன்று பிற்பகல் முற்றாக அகற்றப்பட்டு, அந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் அப்பகுதியிலிருந்து முற்றாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சுற்றுவட்டார பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் குழு இன்னும் உஷார் நிலையில் உள்ளது.