வயதானால் முகத்தில் சுருக்கம் விழுவது இயல்பான ஒன்று.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், முகத்தில் உள்ள சுருக்கத்தை அகற்றி என்றும் இளமையாக இருக்க வெண்டைக்காய் தண்ணீர் ஒன்று போதும்.
முதலில் வெண்டைக்காயை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி பின்னர் தண்ணீரில் உற வைக்க வேண்டும்.
அதன் பிறகு வெண்டைக்காய் தண்ணீரை வடிகட்டி அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது கற்றாழை ஜெல் கலக்கவும்.
இந்தக் கலவையை நேரடியாக முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.
வெண்டைக்காய் தண்ணீர் முகத்தில் உள்ள புள்ளிகளை அகற்றுகிறது.
வெண்டைக்காய் தண்ணீரில் ஆரஞ்சு சாற்றையும் கலக்கலாம். இதுவும் முகத்தில் பொலிவைத் தரும்.
வெண்டைக்காய் தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவலாம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்தது.
சருமம் வறண்டு இருந்தால் வெண்டைக்காய் தண்ணீரில் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.
குறிப்பாக உங்கள் சருமத்தில் தொற்று அல்லது உணர்திறன் கொண்டதாக இருந்தால் இதனை பயன்படுத்தக்கூடாது.