அனைவருக்கும் தான் தக்காளிப் பழம் போல் சிவந்த நிறமுடையவராக இருக்கவேண்டும் என்பதே ஆசை.
அதற்காக பலவிதமான முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். ஆனால், ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் முகம் கருமையடைந்து விடும்.
அவற்றிலிருந்து எவ்வாறு தீர்வு பெறலாம் எனப் பார்ப்போம்…
- முகக் கருமையை நீக்குவதற்கு தயிர் மிகச் சிறந்த பொருள். சற்றே புளித்த தயிரை எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் பூசி, சிறிது நேரத்தின் பின்னர் கழுவினால் முகம் பொலிவாகும்.
- தயிருடன் சந்தனத்தைக் கலந்து முகத்தில் பூசி வரவேண்டும்.
- சந்தனத்தை தேங்காய்ப்பாலுடன் கலந்து முகத்தில் பூசி வந்தாலும் முகம் பொலிவாகும்.
- தேனுடன் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் நல்லது.
- ரோஸ் வோட்டர், கடலை மா, கஸ்தூரி மஞ்சள் என்பவற்றை குலைத்து முகத்தில் பூசினால் கருமை விரைவில் மறையும்.
- பப்பாளிப்பழம், பால், தேன் என்பவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி வரவேண்டும்.
- தக்காளிச் சாற்றை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வரவேண்டும்.