நவக்கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார் சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் தற்போது சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் (14.03.2024) ஆம் திகதி சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். ராகுவும், சூரியனும் எதிரி கிரகங்களாகும்.
இவ்விரு கிரகங்களும் குரு பகவானின் ராசியான மீன ராசியில் ஒன்றிணைவதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.
இந்த சேர்க்கையானது ஏப்ரல் 12 ஆம் திகதி வரை இருக்கும்.
அதன் பின் சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவார். இப்போது மீன ராசியில் சூரியன் ராகு சேர்க்கை நிகழ்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும்.
லட்சியங்கள் நிறைவேறும். ஒவ்வொரு துறையிலும் வெற்றியுடன், நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.
ஒவ்வொரு வேலையிலும் மிகவும் சிறப்பாக செயல்படுவீர்கள். இதனால் உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
இதன் விளைவாக வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் சாதமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்பம். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் இந்த சேர்க்கை காலத்தில் கிடைக்கும்.
நிதி ரீதியாக, புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். சூரியனின் அருளால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
வியாபாரிகள் ரிஸ்க் எடுத்தால் நல்ல வெற்றியைப் பெறலாம். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.