ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இறங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.
இந் நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு இன்று முற்பகல் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போதே அவர் தெரிவித்ததாவது,
” பசில் ராஜபக்ச செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா என்பது தெரியாது. ஆனால் தேசிய அமைப்பாளராக அவர் கட்சியை வழிநடத்துவார். தற்போது கட்சி மறுசீரமைப்பு பணி இடம்பெற்றுவருகின்றது.” எனவும் அவர் தெரிவித்தார் .