இந்தியாவின் மாண்டவி கிராமத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தன்மே சாஹு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தற்போது உறுதி செய்துள்ளன.
அவசரகால சேவைகள் 60 மணி நேரத்திற்கும் மேலாக சிறுவனை மீட்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் 8 வயது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நான்கு நாட்களுக்கு முன் குறுகிய ஆள்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ‘சாஹு’ உயிரிழந்ததாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
சிறுவன் தன்மே சாஹு தனது 12 வயது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது கிணற்றில் விழுந்துள்ளார். சம்பவம் நிகழ்ந்த உடன் மீட்புக் குழுவினர் கிணற்றுக்குச் சென்றுள்ளனர்.
அதற்குள் குழந்தை சாதாரணமாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனினும் சுமார் 40 மணித்தியாலங்கள் கடந்தும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் ஆழ்துளைகிணறில் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.