மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததை சாதகமாக பயன்படுத்தி வீட்டிலிருந்த சுமார் 40 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை – இலகாடு பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.நேற்று முன் தினம் சடுதியாக மின் விநியோகம் தடைப்பட்ட நிலையிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.எனினும் நேற்றியதினமே நகைகள் கொள்ளையிடப்பட்டதை வீட்டின் உரிமையாளர் அறிந்ததாக தொிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அத்துடன், மின் விநியோகம் தடைப்பட்டிருந்தபோது வீட்டில் தங்கியிருந்த உறவினர்கள் மீது அவர் சந்தேகம் தொிவிதுள்ளதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.