நாடு முழுவதும் நேற்று (03) இடம்பெற்ற மின் விநியோக தடை பாராளுமன்ற அலுவல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாராளுமன்றத்திலும் நேற்று காலை சில நிமிடங்கள் மின் தடைஏற்பட்டதினால் பாராளுமன்ற அமர்வு தொடர்பான நேரலை மற்றும் சில அலுவல்களும் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் கூறினார்.
நாட்டில் ஏற்பட்ட மின் தடை பற்றி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபாநாயகரிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் தேசிய பாதுகாப்புக்கான வரவு செயலவுத் திட்ட ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மின்சாரத் துண்டிப்பை மேற்கொண்டு சபை நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்