மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பட்டார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அதே வேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், ஜனாதிபதி நாட்டிற்கு வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் 30 வீதத்திற்கும் அதிகமான மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.