மாலைதீவுக்கு பயணமாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று சிங்கப்பூர் செல்ல தீர்மானித்துள்ளதாவும், அதன் பின்னர் இன்று இரவு அபுதாபி செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது ஜனாதிபதி பதவி இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பாத நிலையில் இன்று இரவு இராஜினாமா கடிதம் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை இலங்கை அதிபர் கோட்டாபயவௌக்கு மாலைதீவில் புகலிடமோ அல்லது அகதி அந்தஸ்தோ வழங்கக்கூடாது என மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் மாலைதீவு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மாலைதீவு ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் மாலைதீவு மக்களும், புலம்பெயர்ந்த இலங்கையர்களும் கோட்டாவை வெளியேற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் மாலைதீவு தகவல்கள் தெரிவிக்கின்றன