பாம்பை கண்டால் படியே நடுக்கும் என சொல்வார்கள். ஆனால் திருமணத்தின் போது மாலைகளுக்கு பதிலாக பாம்புகளை மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலையாக அணிந்துகொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உலகளவில் இடம்பெறும் திருமணங்களில் பல்வேறுவிதமான சடங்குகள் பலவித மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த சடங்குகளில் பல விநோதமானதாக அமைந்துவிடுவதனால் அது வைரலாகிவிடுகின்றது.
அந்த வகையில் ஒன்று தான் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற திருமண சடங்கு இணையத்தில் வைரலாகியுள்ளது.
அக்கிராமத்தில் உள்ள சித்தார்த் சோனவன் (25). இவருக்கும் ஸ்ருஸ்டி (23) என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இருவருமே உள்ளூர் வனவிலங்கு துறை ஊழியர்கள் என கூறப்படுகிறது.
பொதுவாக திருமணத்தில் மணப்பெண்ணும், மணமகனும் மாலையை மாற்றி கொள்வார்கள்.ஆனால் இந்த திருமணத்தில் சித்தார்த்த பெரிய மலைப்பாம்பை மாலையாக மணப்பெண் கழுத்தில் போட பதிலுக்கு ஸ்ருஸ்டி நீளமான பாம்பை சித்தார்த்த கழுத்தில் போட்டார்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பாம்புகளைப் பிடிக்கும் போது மணமகனும், மணமகளும் பயந்ததாகவே தெரியவில்லை . ஆனால் பார்க்கும் பலருக்கும் தலைசுற்றிவிடுகின்றது.