நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை அரசியல்வாதிகள் எவரையும், தன்னைச் சந்திக்க அனுமதிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் அறிவித்துள்ளார்.
இந்நாட்டு மக்களின் துயரங்களுக்குத் தேவையான தீர்வுகளை வழங்காமல் காலம் தாழ்த்துவதைத் தவிர வேறு எதையும் அரசியல்வாதிகள் செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அதன் காரணமாகவே தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்