அமாவாசை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான விரத நாளாகும்.
எந்த நாளை தவற விட்டாலும் அமாவாசை நாளை கண்டிப்பாக தவற விடாமல் இறை வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டினையும் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பது போது மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
மார்கழி அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் நாம் செய்யும் பரிகாரங்கள் நமக்கு பணவரவை அதிகரிக்க செய்யும்.
கட்டுக் கட்டாக பணம் சேரா விட்டாலும், எவ்வளவு செலவு வந்தாலும் அதை சமாளிக்கக் கூடிய அளவிற்கு வரவும் வந்து கொண்டே இருக்கும்.
பொதுவாக வியாழக்கிழமையில் வரும் அமாவாசைக்கு குபேர அமாவாசை என்ற பெயர்.
மார்கழி அமாவாசை
இந்த ஆண்டிற்கான மார்கழி மாத அமாவாசை இன்றைய தினம் (11.01.2024) அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த குபேர அமாவாசையில் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தால் குபேர யோகம் என்பது அமையும்.
அதோடு பணத்திற்கு தட்டுப்பாடு, பஞ்சம் என்பது உங்களுக்கு எப்போதும் ஏற்படாது.
கடன் சுமையும் படிப்படியாக குறையும்.
குபேர அமாவாசை
வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்து, பித்ரு தர்ப்பணம் கொடுத்த பிறகு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
மாலையில் குபேர வேளை என சொல்லப்படும் 06.30 முதல் 8 மணி வரையிலான நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, 3 ஒரு ரூபாய் நாணயங்களை பூஜை அறையில் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
நிதி தொடர்பான உங்களின் குறைகள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு அந்த 3 ஒரு ரூபாய் நாணயங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். முதல் ஒரு ரூபாயை கடுகு கொட்டி வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வையுங்கள்.
வழக்கமாக கடுகு வைத்திருக்கும் அஞ்சறை பெட்டி இல்லாமல், தனியாக ஒரு டப்பாவில் கடுகை கொட்டி, அதற்குள் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வையுங்கள்.
கடுகிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு.
அதனாலேயே பழங்காலம் துவங்கி நம்முடைய வீடுகளில் கடுகு டப்பாவில் பணத்தை போட்டு வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
இப்படி செய்வதன் மூலம் பணம் சேர்கிறதோ இல்லையோ, பணத்திற்கு பஞ்சம் என்பது எப்போதும் ஏற்படாது.
அடுத்ததாக மற்றொரு ஒரு ரூபாய் நாணயத்தை, உங்கள் வீட்டில் உள்ள கல் உப்பு ஜாடியில் போட்டு வையுங்கள்.
கல் உப்பு இல்லா விட்டாலும் இந்த நாளில் சிறிதளவு கல் உப்பு வாங்கி ஒரு ஜாடியில் கொட்டி உங்களின் சமையல் அறையில் வையுங்கள்.
அந்த ஜாடிக்குள்ளாகவோ அல்லது ஜாடிக்கு அடியிலோ அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள்.
மூன்றாவதாக மற்றொரு ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் வீட்டில் அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் போட்டு வையுங்கள்.