இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மாம்பழத் தோட்டம் ஒன்றில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் ணின் சடலம் தொடர்பில் பொலிசார் பகீர் பின்னணியை வெளிக்கொண்டு வந்துள்ளனர்ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி பகுதியில் குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது சிந்தப்பள்ளி சத்யநாராயணா என்பவர் தமது மூத்த சகோதரியின் மகளான ஆதிலட்சுமி என்பவரை கடந்த 2004ல் திருமணம் செய்து கொண்டுள்ளார்
இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இந்த நிலையில் ஆதிலட்சுமிக்கு இன்னொரு ஆணுடன் நெருக்கம் ஏற்பட்டதுடன், முறைதவறிய உறவும் இருந்து வந்துள்ளது இது கணவர் சத்யநாராயணாவுக்கும் தாயார் சாத்தம்மாவுக்கும் தெரியவர, குடும்பத்தில் பிரச்சனை எழுந்துள்ளதுமட்டுமின்றி, ஆதிலட்சுமியின் விவகாரம் ஊர் மக்களுக்கு தெரிந்தால், அது மொத்த குடும்பத்தையும் பாதித்துவிடும் என்பதால், கணவரும் தாயாரும் இந்த விவகாரம் தொடர்பில் ஆதிலட்சுமியுடன் பேசியுள்ளனர்
ஆனால் தமது முடிவில் எந்த மாற்றவும் இல்லை என கூறிய ஆதிலட்சுமியை தாயாரும் கணவரும் சேர்ந்து சுத்தியலால் தலையில் தாக்கி கொன்றுள்ளனர்பின்னர், பொலிசாரிடம் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில், சடலத்தை கிராமத்திற்கு வெளியே அமைந்துள்ள மாம்பழத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார் சத்யநாராயணா
மேலும், தம்மை யாரும் பார்த்துவிடாமல் இருக்க, உடனடியாக அங்கிருந்து குடியிருப்புக்கு திரும்பியுள்ளார் மறுநாள் பகல், அப்பகுதி மக்கள் பாதி எரிந்த பெண்ணின் சடலத்தை மாம்பழத் தோட்டத்தில் பார்த்ததை பொலிசாருக்கு தெரிவிக்க,பொலிசார் சம்பவப்பகுதிக்கு வந்து சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இந்த விவகாரத்தில் விசாரணையும் தொடங்கினர்
பிராதான சாலையில் அமைந்துள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் சத்யநாராயணாவை குறிவைத்தனர்இந்த நிலையில், புதன்கிழமை சத்யநாராயணாவும் ஆதிலட்சுமியின் தாயார் சாத்தம்மாவும் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர்அவர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற காவலில் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்