உதவி வழங்கியவர்:திரு திருமதி சிவநேசன் ஆனந்தமாலா தம்பதியினர் (எசன் யெர்மெனி)
திரு திருமதி சிவநேசன் ஆனந்தமாலா தம்பதியினரின் 30 வது திருமண நாள் இந்த நல் நாளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பலவிதமான உதவிகளை வழங்கி உள்ளார்கள் இன்று தற்சமயம் நாட்டில் உள்ள அசாதாரண காலகட்டத்தில் அடிக்கடி பாடசாலை மூடுவதால் மாணவர்களின் சுய கற்றல் ஊக்குவிக்கும் எண்ணத்துடன் வவுனியா மதவுவைத்தகுளம், தேக்கந்தோட்டம், தோணிக்கல் , தவசிகுளம்,மூன்றுமுறிப்பு ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்தலைமைத்துவ , மற்றும் அன்றாட கூலிவேலை செய்யும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டது அந்த வகையில் திருமண நாள் காணும் சமூக சேவையாளர் திரு திருமதி சிவநேசன் ஆனந்தமாலா தம்பதியினர் சகல இன்பங்களும் பெற்று நீடூழிகாலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி