மாட்டு மந்தைகளைப் போல் பக்த்தர்களை ஆக்கிவிட்டனர் புலத்திலும்
மனித இனம் தற்கால சூழலில் இன்னும் ஒரு படி மேலே போய் நிகழ்காலத்தில் வாழ்கின்ற மனிதர்களையே கடவுளாக நினைத்து வழிபட்டு வரும் நிலைகளைக் இங்கே காண முடிகிறது.
ஆனால் அதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் அவர்களுக்காய் அதே கடவுள் சந்நிதியில் தீபம் ஏற்றி கோமாளித்தனமாக இருப்பதும் தான் சமூகத்தில் தனி மனிதக் கோளாறாக வடிவம் பெற்று, தன்னைச் சார்ந்து இருப்போரையும் பெரும் அவதிக்குள்ளாக்குகின்றது
மாட்டு மந்தைகளைப் போல் பக்த்தர்களை ஆக்கிவிட்டனர்.
எம்மைப்போன்ற ஒருவனை
கடவுளாக்கி வணங்கும் அவலம் தமிழர்களை தவிர வேறு யாரும் அதிகம் செய்திருக்க வாய்ப்பில்லை. தான் எவ்வளவு பிற்போக்குத்தனமான செயல்களில் ஈடுபடுகிறோம் என்று மக்கள் விழிக்காதவரை மூட நம்பிக்கை உள்ளவர்களை எவரும் தடுக்க முடியாது.
இப்படி நம்மைப் போல் இருக்கும் ஒரு மனிதரை வழிபட, மக்கள் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டனர். இதன் பலன்களை அறுவடை செய்து சுகமாக வாழ்பவர் பூசகர்களும் அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களும்.
மனிதர்களே! படைத்த இறைவனுக்கு யாரையும், எதனையும் இணையாக ஆக்காதீர்கள். உலகத்தையும் உங்களையும் படைத்த ஒரே இறைவனை மனிதர்களுக்கு சமமாக ஆக்காதீர்கள். இதனை இறைவன் மன்னிக்கமாட்டான்,
படைத்த இறைவனுக்கு யாராவது நிகர் ஆக முடியுமா? அவனால் படைக்கப்பட்ட அவனது அடியார்களாகிய மனிதர்களும், மனிதர்களில் அவனால் தேர்வு செய்யப்பட்ட பூசகர்களும் அவனது அடிமைகளே பிறகு அவனுக்கு இணையாக யார் தான் இருக்க முடியும் எதற்க்காக தீபம் ஏற்றி வணங்குகின்றீர்கள் !!
இத்தனையும் தெரிந்த மனிதன், தான் வணங்கும்போது இறைவனை மட்டும் வணங்காது, உயிருடன் உள்ள மனிதர்களையும் இறைவனுக்கு இணையாக கருதி வணங்கி இறைவனுக்கு இணை வைக்கும் பாவம் செய்கிறான்.
மனிதர்களே! படைத்த இறைவனுக்கு யாரையும் இணையாக்காமல் அவனை மட்டும் வணங்கி அவனது பொருத்தத்தை பெற முயலுங்கள் கடவுள் உங்களை நேர்வழியில் நடத்துவான்.
எமது புலத்தில் வாழும் எதிர் கால சந்ததியினருக்கு சரியானதை சொல்லிக்கொடுங்கள்!சைவசமயத்தினை உங்கள் நலனுக்காக பயன்படுத்தாதீர்கள்.புலத்தில் வாழும் குழந்தைகள் எமது தவறான செயல் பாட்டினால் எமது மதத்தினை விட்டு விலகும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்காதீர்கள்
நன்றி
முக நூலில் இருந்து எடுக்கப்பட்டது