புதிய அமைச்சரவை நாளை அல்லது நாளை மறுதினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பலர் பதவிகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயம் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் இருப்பதாகவும், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.