பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கம்பளையில் நடைபெறவிருந்த வைபவம் ஒன்றில் அவரை பிரதிநிதித்துவம் செய்து கலந்து கொண்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சத்திரசிகிச்சை காரணமாக பிரதமரால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், பிரதமரின் வாழ்த்துச் செய்தியை தெரிவித்ததாக அவர் கூறினார்.
எப்படியிருப்பினும் பிரதமருக்கு கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்தவித சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தானும் தனது தந்தை நவலோக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை பார்க்க சென்றதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்