முன்னாள் பிரதமர் மஹிந்தவின் தாளத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரங்க செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் இடைக்கால வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றுக்கு சமர்ப்பித்தார். ஆனால் அதை அவர் தயாரிக்கவில்லை என்றும், மொட்டுக் கட்சி எழுதிக்கொடுத்து ரணில் அதை இங்கே வந்து வாசித்துக் காட்டினார் எனவும் சஜித் கூறினார்.
மக்கள் அழுகின்றனர் அரசு கூடி கும்மாளமிடுகின்றது
அதிலே ஒன்றுமே இல்லை என்றும் சிறிய பிரச்சினைக்கு கூட தீர்வில்லை என தெரிவித்த சஜித், மக்கள் அழுகின்றனர் ஆனால் அரசு கூடி கும்மாளமிடுகின்றதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இப்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் ராஜபக்சாக்களை காப்பாற்ற வந்தவர் எனவும் தெரிவித்த எதிர்கட்சிச்தலைவர், அவர் இப்போது சட்டிக்குள் அகப்பட்ட நண்டுபோல உள்ளார் என்றும் , எப்போது அவருக்கு நெருப்பு வைக்கப்படும்போது நண்டு வெளியே ஓடிவிடும் என்றார்.