தங்காலை நகுலோகமுவ புகையிரத நிலையம் இன்று விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
மஹிந்த அமரவீர போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் இந்த நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான மஹிந்த அமரவீர என்பதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஊடகங்களுக்கு முன் விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தங்காலை நகுலோகமுவ புகையிரத நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர பச்சைக் கொடி காட்டி திறப்பு விழாவை ஆரம்பித்து வைத்தார்.
இதேவேளை மஹிந்த அமரவீர பச்சைக் கொடி காட்டிய சம்பவம் எதிர்வரும் நாட்களில் அவர் ஐ.தே. க பக்கம் சாய்வதற்கான அறிகுறியாக இருக்குமோ என அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.