மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மீதும் அவர் சார்ந்த கட்சி மீதும் பல்வேறு அரசியல் விமர்சனங்களை வைக்க முடியும். ஆனால் கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டபோது அவர் உடனே வந்து தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் மறக்க முடியாதவை.
குறிப்பாக கிணறுகளில் வெள்ள நீர் புகுந்து பாவிக்க முடியாத நிலையில் அவரே கிணற்றில் இறங்கி சுத்தம் செய்து கொடுத்தது இன்றும் மக்கள் மனங்களில் உண்டு.
மேலும், மத்துகம தோட்டத்தில் தமிழ் முதியவர் ஒருவர் இறந்தபோது தோட்ட நிர்வாகம் நீதிமன்றம் மூலம் மயானத்தில் எரியூட்ட விடாமல் தடுத்தது.
இதை அறிந்த பாலித தெவரபெரும அவர்கள் உடனே அந்த இடத்திற்கு சென்று இறந்த தமிழ் முதியவரின் உடலை தானே சுமந்து சென்று தகனம் செய்ய வழி வகுத்தார்.
அவர் ஒரு சிங்கள அரசியல் தலைவர். ஆனாலும் அவர் தமிழ் மக்களுக்கு இவ்வாறு உதவி செய்தமை மறக்க முடியாதவை. நினைவு கூரப்பட வேண்டியவை என அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து தோழர் பாலன் என்பவர் முகநூலில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.