மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 29வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்விடத்திற்கு வந்திருந்தனர்.