காசு கொடுக்காமல் இனாமாக எந்த பொருள் கிடைத்தாலும் சரி, சந்தோஷமாக எதையோ சாதித்தது போல, அதை வாங்கி வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்துக் கொள்ளும் பழக்கம் பலரிடம் உள்ளது.
ஆனால் சில பொருகளை நாம் பிறரிடம் இருந்து இனாமாகவோ, பாதி விலைக்கு வாங்கினால் நம் பொருளாதாரத்தில் சிக்கல் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது பொருளாதாரம் எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமா குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் வளரக்கூடிய சூழ்நிலையை தடுக்கும் சக்தியானது உங்களை வந்து அடைவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
கைக்குட்டை, ஊசி, உப்பு, கடுகு எண்ணெய், தீப்பெட்டி. இதில் பெரும்பாலும் ஊசி உப்பு கடுகு எண்ணெய் தீப்பெட்டி இதை நாம் இனமாக வாங்குவதற்கு வாய்ப்பு இல்லை.
இதை யாராவது பாதி விலைக்கு தருகிறேன் என்றாலும் வாங்காதீங்க. இந்த பொருட்களுக்கு உரிய விலையை கொடுத்து வாங்கிக் கொள்ளவும்.
ஆனால் இந்த கைக்குட்டை நமக்கு துணி எடுக்கும் போதெல்லாம் சில கடைகளில் இலவசமாக கொடுப்பாங்க. அந்த கைக்குட்டைக்கு உண்டான ரூபாயை கொடுத்துவிட்டு கைகுட்டையை வாங்கி பயன்படுத்தவும்.
சில சமயம் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக தீப்பெட்டி கடனாக வாங்குவோம். அதை திருப்பித் தர மாட்டோம். மறந்து நம்ம பையிலேயே போட்டுக்கிட்டு வந்துருவோம்.
கோவில் வாசலில் விளக்கு விற்பவர்களிடம், தீப்பெட்டியை கடனாக வாங்கி செல்வோம். அதை திருப்பிக் கொடுக்க மறந்து விடுவோம். இப்படிப்பட்ட தவறையும் செய்யக்கூடாது.
துணி தைக்க கடையில் ஊசி வாங்கும் போது, கடன் வைத்து விட்டு ஊசி வாங்க கூடாது. கையில் காசு கொடுத்த பிறகுதான் ஊசி வாங்க வேண்டும்.
பொதுவாக எண்ணெய் பொருட்களை வாங்கும் போதும் கடன் வைத்துவிட்டு பொருளை வாங்காதீங்க. உப்பு கூட அப்படித்தான் காசு கொடுத்துட்டு தான் வாங்கணும்.
கடைக்காரர் உப்பு எடுத்து டேபிள் மேல வச்சுட்டார்னா, அத நீங்க எடுத்துட்டு வந்துருங்க. கடைக்காரரின் கையில் இருந்து கூட உப்பை நீங்கள் வாங்காமல் இருப்பது நல்லதாம்.