சென்னையில் மருத்துவ மாணவனால் பாடசாலை சிறுமி ஒருவர் சீரழிக்கப்பட்டு நண்பர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 13 வயது மாணவி ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் வசந்த்கிரிஷ் என்பவர், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்தது, பின்னர் தனது நண்பர்களுக்கும் மாணவியை விருந்தாக்கியுள்ளார்.
இந்த வழக்கில்தான் சென்னை – வடபழனி மகளிர் பொலிசார் நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மருத்துவ மாணவரான வசந்த் கிரிஷ் மாணவியை நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ்குமார், தனியார் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பிரசன்னா, கல்லூரி மாணவர் விஷால் ஆகியோரிடம் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்தி உள்ளார்.
இது போன்ற நேரங்களில் மாணவியை முழு போதைக்கு அடிமையாக்கி 4 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெற்றோர் விசாரித்த பின்னரே அவர் கூட்டு பலாத்காரம் மூலமாக சீரழிக்கப்பட்டது அம்பலமானது.
இந்த நிலையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 கல்லூரி மாணவிகளுக்கும், ஒரு பள்ளி மாணவிக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிகளில் ஒருவரான கல்லூரி மாணவர் விஷாலின் காதலிக்கு இந்த விவகாரத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வசந்த் கிரிஷ் ஒரு ஆடம்பர பேர்வழியாக இருந்துள்ளார். வார இறுதி நாட்களில் தனது நண்பர்களுடன் உல்லாசமாக பொழுதை கழித்து வந்தார். இந்த நிலையில்தான் மாணவி வசந்த்கிரிசின் காதல் வலையில் சிக்கி இருக்கிறார்.
கடந்த ஒரு மாதமாக வசந்த்கிரிஷ் தனது நண்பர்களுடன் மாணவியை மிரட்டி வெளிஇடங்களுக்கு அழைத்து சென்று மாணவியுடன் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். போதை பழக்கம் காரணமாக பல நாட்கள் பள்ளிக்கு செல்லாமலும் மாணவி இருந்துள்ளார்.
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் 2 கல்லூரி மாணவிகளும், அவரது தோழியான பள்ளி மாணவி ஒருவரும் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள்.
இந்த வழக்கில் 3 பேரையும், தலைமறைவு குற்றவாளிகளாக போலீசார் சேர்த்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.