நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்ததில் யாழ் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மருத்துவர் அருச்சுனா நாடாளுமன்றம் செல்வதில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது முறைப்படியாக அரச வேலையை விட்டு விலகாது நாடாளுமன்றத் தேர்தலில் வைத்தியர் அர்ச்சுனா போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வைத்தியர் அர்ச்சுனாவின் பாராளுமன்றப் பதவி பறிபடவுள்ளதாக பரபரப்பான தகவல்கள் எழுந்துள்ளன.
அதேசமயம் இந்த சட்டச்சிக்கலால் அவரது பதவி நிச்சயம் பறிக்கப்படும் என சட்டவாளர்கள் சிலர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.

