மருதானையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (25-08-2024) காலை மருதானை ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக ரயில் நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் 1, 2 மற்றும் 3 ஆகிய ரயில் தளங்களுக்கான சேவைகள் தடைப்பட்டுள்ளன.
மேலும் மருதானை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதத்துடன் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.