பொதுவாக பெண்களுக்கு கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிகளில் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் மருக்கள் தோன்றும். இது மருத்துவ ரீதியாக பார்த்தால் நோய் என கூறப்படுகின்றது.
ஆனால் ஜோதிடம் ரீதியாக இதனால் விளைவுகள் இருக்கின்றது என கூறுவார்கள்.
அத்துடன் ஹார்மோன் இன் பாலன்ஸ் (நீர்க்கட்டி தைராய்டு) இது போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு இருக்கும்.
மருக்களை ஆரம்பத்தில் கண்டுக் கொள்ளாவிட்டால் காலங்கள் செல்ல அதிகரித்து விடும். அதிகரித்து விட்டால் நீக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும்.
அந்த வகையில் உடம்பில் இருக்கும் மருக்களை எப்படி இலகுவாக நீக்கலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை பழம்
இஞ்சி
சுண்ணாம்பு – (வெற்றிலை பாக்கு போடும் சுண்ணாம்பு)
மருந்து செய்முறை:
முதலில் ஒரு துண்டு இஞ்சை எடுத்து அதனை துருவிக் கொஞ்சமாக எடுத்து கொள்ளவும்.
பின்னர் அதன் சாற்றை தனியாக பிழிந்து எடுத்து கொள்ளவும்.
அந்த சாற்றில் கொஞ்சமாக சுண்ணாம்பு சேர்க்க கொள்ளவும். கலந்து கொண்டு இருக்கும் பொழுது எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
இந்த கலவையை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
இப்படி தினமும் இரண்டு முறை செய்தால் எந்தவிதமான சிகிச்சையும் இன்றி மருக்கள் கொட்டி விடும்.
ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் உரிய மருத்துவரை நாடிய பின்னர் பயன்படுத்தவும்.