இலங்கை மாத்திரமல்லாது முழு உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற பள்ளிவாசலாகக் கருதப்படக் கூடிய இந்த சிவப்பு பள்ளி எனப்படும் சம்பான்கூட்டு பள்ளியின் உத்தியோகபூர்வ பெயராக அஜாமி உல் அல்வர் எனப்படும் அரபிக் பதத்தை வைத்துள்ளார்கள் என சிவப்பு பள்ளியின் தகவல் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் பிரபல்யமாக சம்பான்கூட்டு பள்ளி என அழைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இலங்கையில் ஒவ்வொரு மதத்தவரும் சிவப்புப்பள்ளியினை வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கக் காரணம் என்ன என்பது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகளாவிய சுற்றுலா பிரயாணிகள் இந்த பள்ளியைச் சிவப்பு பள்ளி என அடையாளப்படுத்துவார்கள்.
காரணம் இந்த பள்ளி சிவப்பு மற்றும் வெண்மை நிறங்கள் கலந்து காணப்படுவதினால் அவர்கள் இவ்வாறு அழைப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.