தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவர் பல நலத் திட்டங்களால் தமிழகத்தை பட்டை தீட்டி இருப்பதோடு, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிக் காட்டியுள்ளார்.அதேபோல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தனது கட்சியான அதிமுக வின் சார்பாக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அது மட்டுமில்லாமல் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவின் சார்பில் முதல்வர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பல்வேறு தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் பிரச்சாரம் செய்த முதல்வர் எதிர்க்கட்சியை வறுத்தெடுத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது மயிலாடுதுறையில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர், எதிர்க்கட்சியான திமுகவில் கருணாநிதி குடும்பம் மட்டுமல்ல திமுகவில் உள்ள 20 தலைவர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் அங்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று காட்டமாக பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், அந்த தலைவர்களின் வாரிசுகள் தான் அந்தக் கட்சியில் பெரிய பொறுப்பில் இருக்க முடியும் என்றும், நீங்களோ தன்னைப் போன்றவர்களோ அக்கட்சியின் மூலம் முதல்வராக முடியாது என்று தெரிவித்ததோடு, இந்த தேர்தலில் வாரிசு அரசியலுக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.