மேஜிக் காளானில் உள்ள “சைகடெலிக்” பொருள் “சைலோசைபின்” மன அழுத்தத்தில் வாழ்பவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அது அவர்களின் மனதை ரிலாக்ஸ் செய்ய பெரிதும் உதவுகிறது.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் உள்ள மனநோய் ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், மனச்சோர்வுக்கான சிகிச்சையில் இருந்த சுமார் 60 நோயாளிகளின் மூளை ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், சைலோசைபின் மூளையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தாங்கள் கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வு
சைலோசைபின் உள்ளிட்ட பிற சைகடெலிக் பொருட்கள், மன நோய்களுக்கான சாத்தியமான சிகிச்சையாக ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்படுகின்றன.
பல ஆய்வுகளில், பதற்றம் மற்றும் மனச்சோர்வு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்தின் செயற்கை பாதிப்பு அதன் செயல்திறனுக்காக சோதிக்கப்பட்டது.
இரண்டு தனித்தனி ஆய்வுகளிலிருந்து தொகுக்கப்பட்ட சமீபத்திய கண்டுபிடிப்புகளில், சைலோசைபின்-உதவி சிகிச்சையைத் தேர்ந்தெடுத்த நோயாளிகள் சிகிச்சையின் போது மட்டுமல்ல, மூன்று வாரங்களுக்குப் பிறகும் மூளை இணைப்பில் முன்னேற்றத்தைக் கண்டனர்.
உதவும் நிலை
எஸ்கிடலோபிராம் எனப்படும் பாரம்பரிய “ஆண்டிரஸன்” மருந்தை விட சைகடெலிக் மன அழுத்தத்திற்கு வித்தியாசமாக சிகிச்சையளிப்பதாக தோன்றுகிறது, ஏனெனில் ஆண்டிடிரஸன் மருந்தை உட்கொள்ளும் நபர்களிடம் மூளை இணைப்பில் இதே போன்ற மாற்றங்கள் காணப்படவில்லை என்கின்றனர்.
இந்த முடிவுகள் இரண்டு ஆய்வுகளில் ஒரே மாதிரியாக வந்ததாக ஆராய்ச்சிக் குழு கூறுகிறது. மனச்சோர்வு என்பது மூளை செயல்பாட்டிற்க்கு கடினமான வடிவங்களை ஏற்படுத்தும் என்பதால், சைலோசைபின் மூளை இந்த முட்டுக்கட்டையைத் தவிர்க்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்