இந்தியாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்று நேற்றைய தினம் (07-07-2023) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த கப்பல் கடல் பகுதியில் காணப்படும் மணல்களை அகழ்வதற்காக பயன்படும் கப்பலின் தோற்றத்தை போன்று காணப்படுகின்றது.
குறித்த கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கப்பல் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலும் இந்த கப்பலை ஏராளமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.