இந்தியாவில்.. இந்தியாவில் தனது மனைவியை கனத்த மனதுடன் வேறு நபருக்கு கணவன் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த வினோத சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. உத்தம் மண்டல் என்ற நபருக்கும் சப்னா குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சப்னாவுக்கு கணவர் மண்டலின் உறவினர் ராஜு குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது.
இதையறிந்த மண்டல் மற்றும் குடும்பத்தார் சப்னாவை கண்டித்தனர். ஆனால் ராஜுகுமாரை திருமணம் செய்து கொள்வதில் சப்னா உறுதியாக இருந்தார். இதையடுத்து மனதை கல்லாக்கி கொண்டு ராஜுகுமாரை சப்னாவுக்கு திருமணம் செய்து வைக்க மண்டல் முடிவு செய்தார். அதன்படி கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து வைத்தார். பின்னர் தம்பதிகள் மண்டல் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். இந்த சமயத்தில் தன்னையும் மீறி மண்டல் கண்களில் இருந்து நீர் வழிந்தது காண்போரை வேதனையில் ஆழ்த்தியது.