மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கணவன் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வாழ்ந்து வந்த கார்த்திகேயன் (33). இவரது மனைவி காயத்ரி (26). கார்த்திகேயனுக்கு காயத்ரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாலைப்புதூர் மேம்பாலம் அருகே காயத்ரி வேறு ஒரு நபருடன் பேசிக்கொண்டு இருந்ததால் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வழக்கம் போல அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு ஒரு கட்டத்தில் எல்லை மீறியது. அதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் சற்றும் சிந்திக்காமல் அவரது அருகில் கிடந்த கல்லை எடுத்து மனைவி காயத்ரியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
அதில் படுகாயம் அடைந்த காயத்ரியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயத்ரி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காயத்ரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆகவே இதுகுறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காயத்ரியின் கணவன் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.