மனைவியின் கிட்னியை விற்று நபர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்த கணவரின் செயல்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்திய ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஒடிசா மாநிலம் கோட மேட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் கந்து. பங்களாதேஷத்திலிருந்து அகதியாக வந்த இவருக்கும் ரஞ்சிதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
மது போதைக்கு அடிமையாக இருந்து வந்த பிரசாந்த் அவரது குடும்பத்தை சரிவர கவனித்து வராமல் இருந்துள்ளார். அத்துடன் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது.
மனைவியைவிட்டு இரகசிய காதலியுடன் வாழ வேண்டும் என்று நினைத்த அவர், தன்னிடம் பணமில்லை என்பதை உணர்ந்ததனால் குறுகிய காலத்தில் பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று எண்ணிய அவர் அதற்காக ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.
கிட்னி திருட்டு
அதன்படி, தனது மனைவி ரஞ்சிதாவின் கிட்னியில் கல் இருப்பதாக நம்ப வைத்து, அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறவைத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கே அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் அவரது கிட்னியை திருடி விற்றுள்ளார். பிரசாந்த் தனது மனைவியின் கிட்னியை திருடி விற்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு தனது காதலியை திருமணம் செய்து அவருடன் பெங்களுருவில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ரஞ்சிதாவுக்கு கடந்த சில நாட்களாக வயிறு வலி ஏற்பட்டதனால் அவர் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டபோது அவருக்கு ஒரு கிட்னி தான் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
இதை கேட்டு அதிர்ந்த ரஞ்சிதா தனது கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது, தான் தான் கிட்னினை விற்று, வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ரஞ்சிதா, தனது கணவர் பிரசாந்த் மீது பொலிஸில் மோசடி மற்றும் தனது கிட்னியை தனக்கே தெரியாமல் திருடி விற்று வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படியில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ரஞ்சிதாவின் கணவன் பிரசாந்தை தனிப்படை அமைத்து பெங்களுரு சென்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.