தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி காண்பித்து மிரட்டிய சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தது.
எனினும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவும், பிறிதொரு தினத்தை தனக்கு அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த சில தினங்களின் முன்னர் இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதியில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றதுடன், அங்கு தடுத்துவைகப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.