அச்சு அசலாக மனிதர்களை போலவே தோற்றமளிக்கும் ஹியூமனாய்ட் ரோபோக்களை உருவாக்கும் பணியில் ரஷ்யாவை சேர்ந்த புரோமோபாட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
விளாடிவோஸ்டோக் நகரில் உள்ள ஆய்வகத்தில் 3டி பிரிண்டிங் முறையில் மனித தோல்களை வைத்து இத்தகைய ரோபோக்களை தயாரிக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பார்த்தாலும், தொட்டாலும், மனிதர்களை போல உணர்வு ஏற்படுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனம்,
அந்த ரோபோக்களுக்கு தலைமுடி, புருவம், விழிகள் என சகலத்தையும் அச்சு அசலாக ஏற்படுத்தி வருகிறது.