பொதுவாக மதிய உணவினை உட்கொண்ட பின்பு தூக்கம் ஏற்படுவது சாதாரண விடயம் தான். ஆனால் இந்த தூக்கம் எவ்வாறு வருகின்றது என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
உணவிற்கு பின்பு நமது உடலின் ஆற்றல் அளவு, ஹார்மோன், ரத்த ஓட்டம், மூளைக்கு செல்லும் கெமிக்கல்ஸ், சர்காடியம் ரிதம் இவற்றின் ஏற்ற இறக்கம் காரணமாக தூக்கம் ஏற்படுகின்றது.
அதிக கொழுப்பு, கார்போஹைட்ரேட் அல்லது கலோரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும் தூக்கம் ஏற்படுமாம்.
இரவில் ஒழுங்காக தூங்கவில்லை என்றால் பகல் நேரத்தில் சோர்வும் மந்த உணர்வும் ஏற்படும்.
சீரற்ற சர்க்கரை அளவு, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், குறைந்த ரத்த அழுத்தம் போன்ற உடல்நல பாதிப்பு உள்ளவர்களுக்கும் சில மாத்திரைகளை சாப்பிடுவதாலும் மதிய நேரங்களில் தூக்கம் வர வாய்ப்புள்ளது.
மதிய நேரத்தில் உடலுக்கு ஆற்றலை கொடுக்கும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவினை சீராக வைக்கவும், பசியை தாங்கும் சிக்கன், பருப்பு வகைகள், டொஃபு இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.
முழு தானியங்கள், சிவப்பு அரிசி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள், அவகோடா, நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் பழங்கள் இவற்றினையும் எடுத்துக் கொள்ளவும்.
உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலும் மந்தமான நிலை ஏற்படும். ஆதலால் சரியான அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும் முக்கியம். சிட்ரஸ் பழங்கள் மற்றும் வெள்ளரிக்காய் இவற்றினையும் எடுத்துக்கொள்ளலாம்.
சாப்பிடும் போது உங்களது முழு கவனமும் உணவில் மட்டும் தான் இருக்க வேண்டும். அப்பொழுது தான் செரிமானம் மிக எளிதாக நடைபெறும்.
சாப்பிட்ட பின்பு சிறிய தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடப்பதால் ரத்த் ஓட்டம் அதிகமாகி உடல் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், தூக்கத்தை தடுக்க முடியும்.