அமரகீர்த்தி அதுகோரல எம்.பியின் கொலை சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் எம்.பிக்கள் மரண அச்சத்துடனேயே வீதியில் செல்கின்றதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல தொடர்பான அனுதாப பிரேரணை மீது பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துதெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் வேதனை மற்றும் அதிருப்தி நிலைமை உருவாகியுள்ளது என்பது உண்மையே எனவும் கூறினார்.
ஆனால் அது கொலை, வீடுகளுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் வரையில் செல்வதற்கு காரணம் இதன் பின்னால் இருந்து சிலர் செயற்படுவதனாலேயே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அன்று போராட்டக் களத்தில் இருந்த மதத் தலைவர்கள் கூட இந்த கொலைகளை தடுக்க முயற்சிக்கவில்லை. அதனை கண்டிக்கவும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ குற்றம் சுமத்தினார்.