கேரளாவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்துள்ளோரின் எண்ணிக்கை இருபதைக் கடந்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். அதேநேரம் கடற்படை மற்றும் விமானப்படை சார்பிலும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது