ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 3ஆம் திகதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்
மேஷம்
விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவுவதில் கவனம் வேண்டும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும்.
வியாபாரப் பணிகளில் சில உதவிகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்
ரிஷபம்
உத்தியோகப் பணியில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கடன் விஷயங்களில் உதவி கிடைக்கும்.
கூட்டு வியாபாரப் பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்ஷ
மிதுனம்
கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு கிடைக்கும்.
தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனை மேம்படும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்.
கடகம்
பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரம் நிமிர்த்தமான ஆலோசனை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும்.
சிம்மம்
மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும்.
புதிய தொழில்நுட்ப தேடல் அதிகரிக்கும். போக்குவரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும்
கன்னி
எதிலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும்.
பொன், பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பேச்சு வன்மையின் மூலம் லாபம் உண்டாகும்.
துலாம்
நீண்ட நாள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உடன் இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படவும்.
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சி மேம்படும் நாள்.
விருச்சிகம்
அலைச்சல் உண்டாகும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலம் உண்டு
தனுசு
நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சமூக வாழ்க்கையில் மதிப்புகள் மேம்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.
மகரம்
அலைச்சல் நிறைந்த நாள். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும்.
மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முதலீடுகளில் ஆலோசனை தேவை.
கும்பம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
மீனம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும்.
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. வியாபாரப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும்.