முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தாக்கியதன் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் அணியின் முனனாள் தலைவர் குமார் சங்ககார கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதாக சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
பகிரப்பட்டு வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என சங்ககார தனது டுவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.
“வெளியாகியுளள் கதை உண்மையா என்று கேட்டவர்களுக்கும் ஆச்சரியப்படுபவர்களுக்கும் – இது முற்றிலும் தவறானது” என சங்ககார கூறியுள்ளார்.
வலைத்தளத்தில் பகிரப்படும் பதிவு
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சிங்கள மொழியிலான அந்த பதிவில்,
“நட்த்திர கிரிக்கெட் வீரர் சங்ககார தனது விலகல் பற்றி முதல் முறையாக தகவல் வெளியிட்டுள்ளார். மகிந்த தாக்கியதால் நான் விலகினேன். சங்கா தகவல் வெளியிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.