மகிந்த உட்பட பலரை சர்வதேச ரீதியாக முடக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் திட்டமிடுவதாக கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல்துறை விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிதாக ஆட்சியமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியான தொடர்புகள் மிகக்குறைவு.
இவ்வாறான சர்வதேச தொடர்புகள் அரசாங்கத்துடன் படிப்படியாக ஏற்படுத்தப்படும் போது, ஒரு கட்டத்தில் ஊழலில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
இந்நிலையில், திருடப்பட்ட சொத்துக்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதற்கு அமெரிக்கா உதவ இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டிலிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவருவது இலகுவான காரியமில்லை என்றாலும் அது இயலாத ஒரு காரியமல்ல. படிப்படியாக முயற்சிப்பதன் மூலம் நிச்சயமாக இதனை செயற்படுத்த முடியும்