மக்களின் தாக்குதலுக்கு பயந்து மகிந்த ஆதரவாளர்கள் தப்பியோடி தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களை மகள் எடுத்துச்செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நிலையை அடுத்து அரசாங்கத்தை விலகுமாறு கோரி, மக்கள் அமைதியான முறையில் தொடர்ட் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் போராட்டத்தில் ஈருபட்டவர்கள் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து இலங்கை மயானபூமியானது.
ஆர்ப்பாட்டக்காரகள் மஹிந்த குண்டர்களால் தாக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள், கடும் கோபம் கொண்டு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் என்பவற்றினை தீக்கிரையாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் பிரதமர் மஹிந்தவின் இல்லம் நேற்றிரவு எரியூட்டப்பட்ட் நிலையில் தப்பியோடிய மஹிந்த குடும்பம் திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியுள்ளனர்.
இந்நிலையில் மகிந்த ஆதரவாளர்கள் வீடுகளில் இருந்து மக்கள் பொருட்களை எடுத்துச்செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன