நாட்டில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் இல்லை என்றால் புதிய அரசை மக்கள் தெரிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதத்தின் மூலம் வலியறுத்தியுள்ளனர்.
பொது மக்களின் நலனுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்றிணை வேண்டும் என்றும் அதற்கு ஜனாதிபதி மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களும் உடன்பட வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய 10 அம்சங்கள் அடங்கிய கடிதத்தில், அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் தலைவராக ஒரு தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கட்சி சார்பற்ற இலங்கையர் ஒருவர் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.