மாகாண சபை தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் பொறுப்பினை யார்க்கு வழங்குவதென்று மக்கள் தீர்மானிப்பார் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நாமல் கூறியதாவது, நாடு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் ஒரு சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அதில் முதற்கட்டமாக விவசாயிகளும், நுகர்வோரும் பயன்பெறும் வகையில் ஒரு சில தீர்மானங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நாட்டில் அரிசி டஹ்ட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படடத வகையில் அரிசியின் இறக்குமதி செய்யப்பட்டு குறைந்த வேலையில் மக்களுக்கு அழைக்கப்படும். தற்போது வருகின்ற மாகாண சபை தேர்தலைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எந்த நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும் , மக்களின் தீர்ப்பே இறுதியானது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியில் பிறிதொரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர மக்களுக்கு அதிகாரம் உண்டு. இராஜாங்கம் ஜனநாயக கொள்கைக்கு மதிப்பளித்து செயற்பட்டு வருகிறது ஆகையால் அரசியல் மட்டத்தில் முன்வைக்கப்படும் அணைத்து குற்றசாட்டுகளையும் ஏற்க முடியாது. அரசாங்கம் கடந்த இரண்டு வருடமாக எந்த மாதிரியான சூழலை எரிகொண்டு வருகிறது எனபதை மக்கள் அறிவர்.
இந்த கொரோனா தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி நாடு மக்கள் அனைவர்க்கும் தடுப்பூசியை பெற்று தருவதே அரசாங்கத்தின் பிரதான கொள்கை எனவும் அவர் தெரிவித்தார்.